1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 2 ஜூலை 2021 (09:22 IST)

மணிகண்டனின் 2 செல்போன்கள் சைபர் கிரைம் ஆய்வு!!

பாலியல் வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் 2 செல்போன்கள் சைபர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. 

 
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பாலியல் வழக்கில் சிக்கி தலைமறைவாகி உள்ள நிலையில் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் மனு முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. நடிகை சாந்தினி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியதை அடுத்து அவர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
 
இந்நிலையில் மணிகண்டன் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அவரின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. பின்னர் சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த மணிகண்டனை, தற்போது புழல் சிறைக்கு மாற்றம் செய்துள்ளனர்.
 
இதனிடையே, நடிகைக்கு அனுப்பிய ஆபாச குறுஞ்செய்திகளை அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உடனுக்குடன் அழித்தது ஆய்வில் அம்பலமாகி உள்ளது.  நடிகைக்கு ஆபாச படங்கள், விடீயோக்களையும் மணிகண்டன் அழித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
பாலியல் வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் 2 செல்போன்கள் சைபர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. பாலியல் புகார் அளித்த நடிகையின் செல்போனை சைபர் கிரைம் போலீசார் சோதனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.