திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 17 பிப்ரவரி 2021 (20:31 IST)

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு: 3பேரின் காவல் நீட்டிப்பு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர் என்பதும் அவர்களில் ஒருவர் அதிமுக நிர்வாகி என்பதும் தெரிந்ததே. இதனையடுத்து சம்பந்தப்பட்ட அந்த அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கடந்த மாதம் கைதான மூன்று பேருடைய நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கடந்த மாதம் கைதான 3 பேரிடம் நீதிமன்ற காவல் மார்ச் 3ஆம் தேதி வரை நீடித்து மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
மேலும் இதுவரை இந்த வழக்கில் 5 பெண்கள் புகார் அளித்துள்ள நிலையில் மேலும் சில பெண்கள் புகார் அளிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் இந்த வழக்கில் திடீர் திருப்பங்கள் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.