திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 9 ஜூன் 2021 (11:22 IST)

பாலியல் வழக்கு: மணிகண்டனின் பாதுகாப்பு அதிகாரி & உதவியாளர் சரண்!

முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி, உதவியாளர் மகளிர் போலீசில் ஆஜர். 

 
நடிகை சாந்தினி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியதை அடுத்து அவர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால் அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற நிலை இருந்தது.
 
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி, உதவியாளர் மகளிர் போலீசில் ஆஜராகி உள்ளனர். சென்னை அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் இருவரும் ஆஜராகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே விரைவில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்.