திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (10:19 IST)

ராமதாஸ் உடன் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்திப்பு! கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையா?

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களை முன்னாள் அதிமுக அமைச்சர் சிவி சண்முகம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் திமுக கூட்டணி கிட்டத்தட்ட பேச்சுவார்த்தையை முடிந்து விட்டது. முதல்வர் ஸ்டாலின் நாளை சென்னை திரும்பியதும் கூட்டணி கட்சிகளுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் பாஜக கூட்டணியும் தன்னுடன் இணையும் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தேமுதிக, அமமுக, தமாக உள்ளிட்ட கட்சிகளுடன் கிட்டத்தட்ட பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அதிமுக தரப்பில் கூட்டணியில் இணைய எந்த கட்சியும் முன்வராத நிலையில் தற்போது முன்னாள் அதிமுக அமைச்சர் சிவி சண்முகம் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களை சந்தித்து கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு அதிமுக கூட்டணியில் பாமக இணையுமா? அல்லது பாஜக கூட்டணியில் பாமக இணையுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Mahendran