1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 18 ஆகஸ்ட் 2021 (16:34 IST)

பள்ளிக்கூடத்தில் திடீர் தீ விபத்து! – புத்தகங்கள், சீருடைகள் எரிந்து நாசம்!

பள்ளிக்கூடத்தில் திடீர் தீ விபத்து! – புத்தகங்கள், சீருடைகள் எரிந்து நாசம்!
செப்டம்பர் முதல் தேதி முதல் பள்ளிகள் தொடங்க உள்ள நிலையில் கடலூரில் பள்ளி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்குமேலாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் சுழற்சி முறையில் வகுப்புகளை தொடங்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த செங்கமேடு அரசு பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீ விபத்தில் மாணவர்களுக்கு வழங்க இருந்த புத்தகங்கள், புத்தக பைகள் மற்றும் சீருடைகள் எரிந்து நாசமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தீயணைப்பு துறையினர் தீயை அணைத்த நிலையில் தீ விபத்தின் காரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.