1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 9 பிப்ரவரி 2022 (12:23 IST)

தமிழகத்தில் 114 புதிய பாலங்கள் - ரூ.150 கோடி ஒதுக்கீடு!

தமிழ்நாட்டில் உள்ள ஊரகப்பகுதிகளில் 114 இடங்களில் ரூ.336 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்ட அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசனை வெளியிட்டுள்ளது.

 
முன்னதாக ஊரக பகுதிகளில் புதிய பாலங்கள் கட்டப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள ஊரகப்பகுதிகளில் 114 இடங்களில் ரூ.336 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்ட அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
 
ரூ. 336 கோடியில் முதல்கட்டமாக தற்போது ரூ 150 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை  வெளியிட்டிருக்கிறது.  மீதமுள்ள தொகை நடப்பாண்டிலேயே  ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
 
அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல் ஈரோடு, கரூர், மதுரை, சேலம், ஆகிய இடங்களில் புதிய பாலம் அமைக்கப்படவுள்ளது. தரமான பொருட்களை கொண்டு பாலம் கட்டப்படுவதை ஆய்வு செய்து உறுதி செய்ய அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.