திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 2 ஜூன் 2021 (16:53 IST)

இளையராஜாவுக்குப் பிறந்தநாள்...கமல்ஹாசன் வாழ்த்து

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் இளையராஜா. இவர் இன்று தனது 78வது பிறந்தநாள் கொண்டாடுகிறார்   இவருக்கு முன்னணி நடிகர்கள்,நடிகைகள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.  

தமிழிசைக்குப் புத்துயிரூட்டியது மெல்லிசை மன்னர் விஷ்வநாதன்,. கே.வி.மகாதேவன் உள்ளிட்ட பல ஜாம்பாவான்களாக இருந்தாலும் இதை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச் சென்று தமிழிசைக்கு உலகளவில் அங்கீகாரம் பெற்றுத்தந்து, ஆசியாவிலேயே முதன்முதலாக சிம்பொனி அமைத்த பெருமைக்குரியவர் இளையராஜா. இவரது பெருமையுணர்ந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி இசைஞானி பட்டத்தை இளையராஜாவுக்கு சூட்டிப் பெருமைப்படுத்தினார். ஹிந்தி சினிமாவைச் சுற்றிவந்த பிறமாநில சினிமா ரசிகர்களை தன் இசைத்திறமையால் கட்டிப்போட்ட இசைச் சகலகலா வல்லவர். ஒரு சாமானியனின் விரல்களிலும் மூளையிலும் இசைத்தேவி வீற்றிருந்து சாகாவரம்பெற்ற அற்புதமான பாடல்களைப் படைக்கச் செய்யும் கருவியாகவும் மேதையாகவும் இளையராஜாவை வனைத்துள்ளது அடுத்துவரும் இளைஞர்களுக்கும், சாதனைப்படைக்க விரும்புவர்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டு. உழைப்பின் மீதான அர்ப்பணிப்பு, அசாதாரண உழைப்பு, எதையும் புதுமைநோக்குடன் அணுகும் திறமை, தன் திறமையின் மீதான தன்னம்பிக்கை, ஐம்பது ஆண்டுகளாக இசை அரசனாக இந்திய சினிமாவை ஆட்டுவிக்கும் உலகத்தரத்திலான பணிகள், எண்ணமுடியாத விருதுகள், எண்ணிக்கையில் அடங்காத ரசிகர்கள், பணக்காரர்களையும் ஏழைகளையும் இசையெனும் ஒரே தட்டில் நிறுத்துவைத்து ரசிக்கவைக்கும் பொதுவுடைமையாக உமது பாடல்களே காலத்தின் சாம்ராட்டாக நின்றுபேசும் என்றும்.

 இந்நிலையில், தமிழ் சினிமாவில் உச்ச நடிகர் கமல்ஹாசம், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். அதில், இசைக்கு இளைஞர் இளையராஜா.என் மனதுக்குக் கிளைஞர்.உணர்வுகளில் உறவாய் இருப்பவர்.சம்பவங்களை ஸ்வரங்களாய் மொழிபெயர்ப்பவர். பல கோடி மனங்களை கண்டக்ட் செய்யும் மேஸ்ட்ரோவிற்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், விஜய்சேதுபதியின்  மாமனிதன் படத்தில் இளையராஜாவும் அவரது மகன் யுவனும் இணைந்து இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.