1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 12 மே 2023 (07:54 IST)

பொன்னியின் செல்வன் திரையிடப்பட்ட திரையரங்கில் தீ விபத்து: கடலூரில் பரபரப்பு..!

கடலூரில் பொன்னியின் செல்வன் திரையிடப்பட்ட திரையரங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதை எடுத்து பார்வையாளர்கள் அலறி அடித்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னாள் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது என்பதும் இந்த படம் முதல் பாகத்தை போலவே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் பொன்னின் செல்வன் திரைப்படம் கடலூரில் உள்ள ஒரு திரையரங்கில் திரையிடப்பட்ட நிலையில் திடீரென அந்த திரையரங்கில் ஆபரேட்டர் அறையில் இருந்து புகை வந்தது. 
 
அந்த அறையில் இருந்த ஏசி யில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து. ஆப்பரேட்டர் அறையில் உள்ள  தீயை அணைத்தனர். இந்த விபத்தில் ஏசி மட்டும் சேதம் அடைந்துள்ளதாகவும் வேறு எந்த சேதமும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva