மோச்சா புயல் : தெற்கு அந்தமான் பகுதிக்கு செல்ல வேண்டாம் - அமைச்சர் ராமச்சந்திரன்
மோச்சா புயல் காரணமாக தெற்கு அந்தமான்பகுதிக்கு மே 14 ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அமைச்சர் ராமச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.
வங்க கடலின் தென்கிழக்கு மற்றும் தெற்கு அந்தமான் பகுதியை ஒட்டி உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில் தற்போது மோக்கா புயலாக வலுவடைந்துள்ளது.
இந்த மோக்கா (Mocha) புயல் வடக்கு – வடகிழக்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து வரும் நிலையில் வரும் 14ம் தேதி வங்கதேசம் – மியான்மர் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்த நிலையில், இன்று மாலை அமைச்சர் கூறியுள்ளதாவது: மோச்சா புயல் காரணமாக தெற்கு அந்தமான் கடல் பகுதிக்கு வரும் மே 14 ஆம் தேதி வரை செல்ல வேண்டாம்; வங்காள விரிகுடா கடல் பகுதிக்கும் செல்ல வேண்டாம்; ஏற்கனவே கடலுக்குச் சென்றவர்கள் விரைவாக கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.