திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 31 ஜூலை 2019 (18:11 IST)

குடும்ப பிரச்சனையில் குழந்தையை கொன்ற கொடூர தாத்தா !

கோவை அருகே உள்ள கிணற்றுக்கடவு அரவம் பாளையம் பிரிவில் வசித்து வந்தவர் குமார். இவர் கூலித்தொழிலாளி ஆவார். இவருக்கு 10 மாத குழந்தை இருந்தது. இவரது முதல் மனைவி பிரிந்து சென்றுவிட்டதால், 2 வது ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இதையடுத்து குடும்பத்தில் எதோ பிரச்சனை எழுந்துள்ளது . அவரது 2வது மனைவியும் குமாருடம் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.  இந்நிலையில் குமாரின் மனைவி தாய் வீட்டிற்கு சென்றதற்கு அவரேதான் காரணம் என்று குமாரின் தந்தை கூறியுள்ளார்.இதற்கு குமார், தன் தந்தையை திட்டியதாகத் தெரிகிறது. 
 
இதனையடுத்து நேற்று காலை நேரம் குழந்தை தர்ஷினி காணாமல் போனதால்,குமார் கிணத்துக்கடவு போலீஸில் புகார் செய்தார். 
 
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். அப்போது குமாரின் தந்தை குழந்தை தர்ஷினியை கொன்று ஒத்தக்கால் மண்டபம் பூங்கா நகரில் வீசியது தெரியவந்தது. குழந்தையின் சடலத்தை மீட்ட போலீஸார் குமாரின் தந்தையை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.