தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவில் F4 சாம்பியன்ஷிப்! விரைவில் சென்னையில்..!
- சென்னையில் 700 வீடுகள் அகற்றம்.. எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் கைது..!
- சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது- முதல்வர்
- மாணவர்களை தாக்கிய நடிகை ரஞ்சனா நாச்சியார் கைது...
- சர்வதேச ஓட்டுனர் உரிமத்தை வைத்து இந்தியாவில் வாகனம் ஓட்ட முடியுமா? - போக்குவரத்து துறை விளக்கம்!
சேப்பாக்கத்தை அடுத்து சென்னையில் இன்னொரு கிரிக்கெட் மைதானம்: மாநகராட்சி அறிவிப்பு..!
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் கோபாலபுரம் திடலில் கிரிக்கெட் மைதானம் அமைய இருப்பதாகவும் அதற்காக ரூபாய் 1 கோடி ரூ.9 லட்சம் மாநகராட்சி சார்பில் செலவு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
தேனாம்பேட்டை மண்டலம், 111-வது வார்டில் கோபாலபுரம் விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக இந்த மைதானத்தில் 3-ல் 2 பங்கு இடத்தில் கிரிக்கெட் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட உள்ளது.
அதற்கான நிதியை ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ ந.எழிலன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடியே 9 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார். அதற்கான பணிகள் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் இந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் குத்துச்சண்டை விளையாட்டு பயிற்சி பெறும் வகையில், இந்த விளையாட்டு மைதானத்தில் 3-ல் ஒரு பங்கு பகுதியில் மட்டும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் குத்துச்சண்டை விளையாட்டுப் பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளது.
இந்த 2 பணிகள் முடிவடையும் போது, அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் கிரிக்கெட் விளையாட்டுப் பயிற்சியையும், குத்துச்சண்டை விளையாட்டுப் பயிற்சியையும், இதர வகையான விளையாட்டுப் பயிற்சிகளையும் மேற்கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Edited by Siva
