திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 4 நவம்பர் 2023 (08:23 IST)

சர்வதேச ஓட்டுனர் உரிமத்தை வைத்து இந்தியாவில் வாகனம் ஓட்ட முடியுமா? - போக்குவரத்து துறை விளக்கம்!

TTF Vasan
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே பைக்கில் வாசன் சென்று கொண்டிருந்தபோது வீலிங் செய்ய முயன்றார். அப்போது அவரது பைக் விபத்துக்குள்ளாகி அவர் படுகாயம் அடைந்தார்.

இதனை அடுத்து ஆபத்தான முறையில் வாகனத்தை இயக்குதல் உள்ளிட்ட சில பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவர்  ஜாமீன் மனு தாக்கல் செய்த  நிலையில் அந்த மனுக்கள் தொடர்ந்து  தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து, நேற்று முன்தினம் அவருக்கு  நிபந்தனை ஜாமீன் வழங்கியது  உயர் நீதிமன்றம்.

இந்த நிலையில் இன்று புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார் டிடிஎஃப் வாசன். அவரது டிரைவிங் லைசென்ஸ் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்ட நிலையில் இதுகுறித்து அவரிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர்.

அப்போது அவர் கூறியதாவது:  ‘’பைக் ஓட்டுவதை நிறுத்த மாட்டேன். சிறைவாசிகள் எனக்கு உதவினர். அதிகாரிகள்  பண்பாக நடந்துகொண்டனர். பைக் தான் என்னுடைய லைஃஃப். லைசென்ஸ் ரத்தானதை கேட்டபோது வருத்தமா இருந்தது. என்னிடம் இன்டர்நேசனல் லைசென்ஸ் இருக்கிறது…தொடர்ந்து பைக் ஓட்டுவேன்’’ என்று தெரிவித்திருந்தார்.

இதனால் இண்டர் நேஷனல் லைசென்ஸ் இருந்தால் இந்தியாவில் வாகனம் ஓட்ட முடியுமா என்ற கேள்வி எழுந்தது.

இதுகுறித்து தமிழக போக்குவரத்துத்துறை கூறியதாவது:

சர்வதேச ஓட்டுனர் உரிமத்தை வைத்துக் கொண்டு இந்தியாவில் எந்தவொரு பகுதியிலும் டிடிஎஃப்.வாசனால் வாகனம் ஓட்ட முடியாது என்று தெரிவித்துள்ளது.