தொடர்புடைய செய்திகள்
- மெகா தடுப்பூசி இந்த வாரம் கிடையாது… அமைச்சர் மா சுப்ரமண்யன் தகவல்!
- அமீர் இயக்கத்தில் மீண்டும் கதாநாயகன் ஆகும் சூரி!
- 3 வருடமாக ஸ்டார் ஹோட்டலில் வசிக்கும் தமிழ் இயக்குனர்! அந்த காசுல ஒரு படமே எடுக்கலாமே!
- மீண்டும் இளம் ஹீரோக்களை ஒருங்கிணைத்த சுந்தர் சி! இந்தி படத்தின் காப்பியா?
- எகிறும் கொரோனா; ஆக்சிஜனை தயாராக வைத்திருங்கள்! – மத்திய அரசு அறிவுறுத்தல்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளராக அறிவிக்கப் பட்ட மாற்றுத்திறனாளி… குவியும் பாராட்டுகள்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தங்கள் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட செயலாளராக பாரதி அண்ணா என்பவரை நியமித்துள்ளது.
மற்ற எல்லாத்துறைகளிலும் மாற்றுத்திறனாளிகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகாரங்களையும் வாய்ப்புகளையும் பெற்றிருந்தாலும், அரசியலில் இன்னும் இந்த நிலையை எட்ட முடியவில்லை. இந்தியாவில் இருக்கும் தேசிய கட்சிகள் மற்றும் மாநிலக் கட்சிகள் என எதிலும் மாற்றுத்திறனாளிகள் குறிப்பிடப்படும்படியான பதவிகளையோ பொறுப்புகளையோ வகிக்கவில்லை.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தங்கள் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட செயலாளராக பாரதி அண்ணா என்ற கண்பார்வை இல்லாத மாற்றுத்திறனாளியை நியமித்துள்ளது. மதுராந்தகத்தில் பிறந்த பாரதி அண்ணா சட்டப்படிப்பை முடித்தவர். கண்பார்வை குறைபாடுகளால் நீண்ட ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு இருந்த பாரதி, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் முழுவதுமாக பார்வையை இழந்தார். இதற்கு முன்னர் மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் தீண்டாமை ஒழிப்பு முன்னணியில் பணியாற்றியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
