செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 12 ஜனவரி 2022 (11:18 IST)

மெகா தடுப்பூசி இந்த வாரம் கிடையாது… அமைச்சர் மா சுப்ரமண்யன் தகவல்!

தமிழகத்தில் இந்த வாரம் பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு மெகா தடுப்பூசி முகாம் நடக்காது என அமைச்சர் மா சுப்ரமண்யன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் விறுவிறுப்பாக போடப்பட்டு வருகின்றன. தடுப்பூசி போடும் விகிதத்தை அதிகப்படுத்துவதற்காக வாரம் தோறும் வார இறுதி நாட்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் வரும் வாரம் பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு மெகா தடுப்பூசி முகாம் நடக்காது என மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமண்யன் தெரிவித்துள்ளார்.