1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 12 ஜனவரி 2022 (11:11 IST)

அமீர் இயக்கத்தில் மீண்டும் கதாநாயகன் ஆகும் சூரி!

இயக்குனர் அமீர் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

நடிகர் சூரி திரைத்துறையில் பல வருட முயற்சிகளுக்கு பிறகு முன்னணிக் காமெடி நடிகராக உருவாகி நிலையான இடத்தைப் பிடித்தார். முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த அவர் இப்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இந்நிலையில் இயக்குனர் அமீர் 8 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கும் புதிய படத்திலும் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அமீர் ஆதிபகவன் படத்துக்கு பிறகு தொடங்கிய சந்தனத் தேவன் திரைப்படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இப்போது புதிதாக சூரி நடிக்கும் படத்தை தொடங்குகிறார்.