புதன், 19 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 4 நவம்பர் 2025 (10:28 IST)

SIR வாக்காளர் பட்டியலில் 60% பேர் நீக்கப்படலாம்: பாலகிருஷ்ணன் எச்சரிக்கை

SIR வாக்காளர் பட்டியலில் 60% பேர் நீக்கப்படலாம்: பாலகிருஷ்ணன் எச்சரிக்கை
தமிழகத்தில் தொடங்கியுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியால்  60% வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கே. பாலகிருஷ்ணன் கவலை தெரிவித்துள்ளார்.
 
தஞ்சாவூரில் பேசிய அவர், ஒரு மாத காலத்துக்குள் 6.18 கோடி வாக்காளர்களை சரிபார்ப்பது சாத்தியமற்றது என்றும், மழைக்காலத்தில் இப்பணியை மேற்கொள்வது பயனற்றது என்றும் கூறினார். 
 
மேலும், 2002ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலை இணையத்தில் பதிவிறக்கம் செய்து படிவம் பூர்த்தி செய்யும் நடைமுறையால், கிராமப்புற மக்கள் மற்றும் கணினி வசதி இல்லாதவர்கள் பாதிக்கப்படுவார்கள். இதன் விளைவாக, ஏழைகள் மற்றும் சிறுபான்மையினர் உட்பட பலரின் பெயர்கள் நீக்கப்பட்டு, அவர்களின் குடியுரிமை கேள்விக்குறியாகும் என அவர் எச்சரித்தார்.
 
இந்த பணியை கட்டாயம் நிறுத்திவைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
Edited by Mahendran