அரசியல் கட்சிகளின் எதிர்ப்புகளை மீறி வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணி ஆரம்பம்..!
அரசியல் கட்சிகளின் எதிர்ப்புகளை மீறி தமிழகம், புதுச்சேரி உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி (SIR) இன்று தொடங்கியுள்ளது.
அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, சென்னை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்தல் அதிகாரிகள் வீடுவீடாக சென்று வாக்காளர் கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்கின்றனர்.
2002 மற்றும் 2005ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு கணக்கெடுப்பு நடைபெறுகிறது. அதிகாரிகள் வீடுகளுக்கு சென்று படிவங்களை வழங்குவார்கள். 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம்.
வரைவுப் பட்டியல் டிசம்பர் 9ஆம் தேதியும், இறுதிப் பட்டியல் 2026 பிப்ரவரி 7ஆம் தேதியும் வெளியிடப்படும். திருத்தங்கள்/புதிய பெயர்கள் சேர்ப்புக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 2026 ஜனவரி 3 கடைசித் தேதி ஆகும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், தங்களை பதிவு செய்ய ஆதார் அட்டை, கடவுச்சீட்டு, பிறப்பு சான்றிதழ், அரசு அடையாள அட்டை உட்பட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலை சமர்ப்பிக்க வேண்டும்.
Edited by Mahendran