குறுக்க இந்த கௌஷிக் வந்தா?... வாஷிங்டன் சுந்தர் டிரேடுக்கு ‘No' சொன்ன நெஹ்ரா!
சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வை அறிவித்தார். இந்நிலையில் அடுத்த சீசனில் அஸ்வினுக்குப் பதில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை வாங்க சி எஸ் கே நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த டிரேடிங்குக்கு வாஷிங்டன் சுந்தர் தற்போது இடம்பெற்றிருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்பட்டது. குஜராத் அணியால் 3.25 கோடி ரூபாய்க்கு சுந்தர் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
இந்த தகவல் குறித்துத் சில நாட்களுக்கு முன்னர் அஸ்வின் தன்னுடைய யுடியூப் சேனலில் பேசியுள்ளார். அதில் “இந்த தகவல் குறித்து வாஷிங்டன் சுந்தரிடம் நான் பேசினேன். இது குறித்து தனக்கு எந்த தகவலும் வரவில்லை என்று அவர் சொன்னார். குஜராத் மற்றும் சென்னை அணி நிர்வாகத்தினரிடையே இது சம்மந்தமாக ஏதாவது பேச்சுவார்த்தை நடந்திருக்கலாம். அது குறித்து எனக்கு எதுவும் தெரியவில்லை என்றார்” எனத் தெரிவித்திருந்தார்.
ஆனால் இப்போது வெளியாகியுள்ள தகவலின் படி குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா வாஷிங்டன் சுந்தரை ட்ரேட் செய்யும் முடிவுக்கு மறுப்புத் தெரிவித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த தகவலை குஜராத் டைட்டன்ஸ், சிஎஸ்கே நிர்வாகத்திடம் முன்பே தெரிவித்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.