புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 4 செப்டம்பர் 2021 (08:41 IST)

கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேரும் தடுப்பூசிகள்!

மத்திய அரசிடம் தமிழக அரசு இந்த மாதம் ஒரு கோடியே 4 லட்சம் தடுப்பூசிகளை கேட்டு பெற்றுள்ளது. 
 
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்தியாவிலும் கோவிஷீல்டு, கோவாக்சின் உள்ளிட்ட 5 வகையான தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.
 
இதனிடையே மத்திய அரசிடம் தமிழக அரசு இந்த மாதம் ஒரு கோடியே 4 லட்சம் தடுப்பூசிகளை கேட்டு பெற்றுள்ளது. எனவே மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசுக்கு தினமும் தடுப்பூசிகள் வந்து கொண்டிருக்கின்றன.
 
அதன்பை 7,81,860 கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தது. சென்னை விமான நிலையத்துக்கு வந்த தடுப்பூசிகள் தேனாம்பேட்டையில் உள்ள கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.