1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 26 ஏப்ரல் 2021 (13:40 IST)

வாக்கு எண்ணிக்கையை நிறுத்த நேரிடும்… நீதிமன்றம் எச்சரிக்கை!

கொரோனா விதிமுறைகளை ஒழுங்காக பின்பற்றாவிட்டால் வாக்கு எண்ணிக்கையை தடுத்த நேரிடும் என தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மே 2 ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு முன்னதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதுசம்மந்தமான வழக்கு ஒன்றின் விசாரணையின் போது சென்னை உயர்நீதிமன்றம், தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை ஒழுங்காகப் பின்பற்றாவிட்டால் வாக்கு எண்ணிக்கையை தடுத்து வைக்க நேரிடும் என தேர்தல் ஆணையத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.