1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 26 ஏப்ரல் 2021 (12:37 IST)

உங்க மேல கொலை கேஸ் போட்டாலும் தப்பு இல்ல - தேர்தல் ஆணையம் மீது தலைமை நீதிபதி காட்டம்!

கொரோனா இரண்டாவது அலை பரவியதற்கு முழு காரணமே தேர்தல் ஆணையம் தான் என  தலைமை நீதிபதி காட்டம் தெரிவித்துள்ளார். 
 
அரசியல் கட்சிகள் இஷ்டம் போல் பிரச்சாரம் செய்தே தொற்று பரவலை அதிகரித்துவிட்டனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த நீதிமன்றம் எவ்வளவோ அறிவுறுத்தியும் தேர்தல் ஆணையம் காதில் வாங்கவில்லை. 
 
கொரோனா இரண்டாவது அலை பரவலுக்கு முழுக்க முழுக்க தேர்தல் ஆணையமே காரணம் உங்கள் மீது கொலை குற்றம் சுமத்தினாலும் தவறில்லை என கூறியுள்ள  தலைமை நீதிபதி, பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்ளவில்லை என்றால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.