புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 28 ஆகஸ்ட் 2019 (13:17 IST)

தேங்காய் என நினைத்து மருமகனின் கழுத்தை அறுத்த மாமனார்..

பிலிப்பைன்ஸ் நாட்டில் தேங்காய் உறிப்பதாக நினைத்து மருமகனின் கழுத்தை அறுத்து கொன்றுள்ளார் மாமனார்

பிலிப்பைன்ஸ் நாட்டில் ரோஜர் பஜே என்பவர், தனது மருமகன் எட்வார்டோவுடனும், அவரது நண்பர் எட்கார்டோவுடனும் மது அருந்திகொண்டிருந்தார். மது போதையில் மூவரும் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது தீடீரென ஒரு அலறல் சத்தம் கேட்டுள்ளது. என்னவென்று எழுந்து பார்த்த எட்கார்டோவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ரோஜர் தனது மருமகனான எட்வார்டோவை கண்ணை மூடியபடி கழுத்தை அறுத்துகொண்டிருந்தார். இதனை பார்த்த எட்கார்டோ பயத்தில் ஓட்டம் எடுத்தார். இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில் ரோஜருக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி இருப்பதாகவும், தேங்காய் உறிப்பதாக எண்ணி தனது மருமகனின் கழுத்தை அறுத்து கொலை செய்ததாவும் தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.