புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 28 ஆகஸ்ட் 2019 (14:45 IST)

திமுக பிரமுகர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை.... போலீஸார் தீவிர விசாரணை

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே செங்கப்பள்ளியை சேர்ந்தவர் மருந்துவர் ஆனந்த் (50). இவர் நாமக்கல் மாவட்ட திமுக மருத்துவர் அணி அமைப்பாளராக இருந்து வந்தார், இவரது மனைவி அபர்ணா ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு 17 வயதில் ஒரு பெண் இருக்கிறார். அவர்  அங்குள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
பரமத்தி வேலூர் பேட்டையில் உள்ள ஈ என் டி மருத்துவமனை நடத்துவந்தார் ஆனந்த். இதம் மேல் மாடியில் குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இந்நிலையில் நேற்று செங்கப்பள்ளியில் உள்ள தோட்டத்திற்குச் சென்ற ஆனந்த், மனைவி தமிழ்ச்செல்விக்கு போனில் அழைத்து தான் தற்கொலை செய்து கொல்லப்போவதாக கூறியுள்ளார்.
 
அப்போது கோவையில் இருந்த தமிழ்ச்செல்வி, ஆன்ந்தின் பேச்சைக் கேட்டு பதறிப்போனார். உடனே தனது உறவினர் செல்வத்து போன் போட்டு , கணவரை போய் காப்பாற்றும்படி கேட்டுக்கொண்டார். அதன் பிறகு செல்வம் தோட்டத்திற்கு செல்ல ... ஆனந்த்  வீட்டுக்குப் போகலாம் வண்டியை எடு என கூறியுள்ளார்.
 
செல்வம் காரை யூ டர்ன் திருப்புவதற்குள், ஆன்ந்த் தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் தாடையில் வைத்து சுட்டுக்கொண்டார். ஆனந்த சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 
இதனால் அதிர்ச்சியடைந்த செல்வம் பரமத்தி வேலூர் போலீஸாருக்கு தகவல் அளித்தார். போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரனை துவக்க ஆரம்பித்துள்ளார். அவர் தற்கொலை செய்துகொண்டதற்க்கான காரணம் இதுவரை தெரியவில்லை. போலீஸார் இன்று 2 வது நாளாக தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.