1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. court send notice to bobby simha

முன்னாள் எம்பி உறவினர் தொடர்ந்த அவதூறு வழக்கு: பாபிசிம்ஹாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்..!

பாபிசிம்ஹா
முன்னாள் எம்பி ஜே.எம்.ஆரூணின் சகோதரர் மகன் உசேன் தொடர்ந்த வழக்கில் நடிகர் பாபி சிம்ஹாவுக்கு ஆலந்தூர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
நடிகர் பாபி சிம்ஹா  வனத்துறை தொடர்பான பல வழக்குகளை ஜே.எம்.ஆரூணின் சகோதரர் மகன் உசேன் சந்தித்து வருவதாக அவதூறாக பேசி உள்ளதாக உசேன் புகார் அளித்திருந்தார். 
 
இந்த புகாரின் அடிப்படையில் ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. வனத்துறை வழக்கை எதிர்கொள்வதாக கூறியதாலும், உருவ கேலிக்கு உள்ளானதாலும் மன உளைச்சலுக்கு ஆளானேன் என்று உசேன் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். 
 
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது பாபி சிம்ஹா பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம் அவருக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கு வரும் இரண்டாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
தமிழ்நாட்டை மட்டும் குறிவைப்பது ஏன்? நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கபில் சிபல் கேள்வி..!