திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 23 ஏப்ரல் 2022 (09:24 IST)

பெண் போலீஸ் கழுத்தறுப்பு: நெல்லை திருவிழாவில் பரபரப்பு!

நெல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த உதவி பெண் காவல் ஆய்வாளரின் கழுத்து அறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 
திருநெல்வேலியை அடுத்த பழவூர் கிராமத்தில் நடிபெற்ற கோயில் திருவிழாவிற்கு போலீஸார் பந்தோபஸ்து போடப்பட்டிருந்தது. அதில் உதவி காவல் ஆய்வாளர் மார்கரெட் தெரசாவும் இருந்தார். இந்நிலையில் திருவிழா அன்று இரவு ஆறுமுகம் என்பவர் உதவி காவல் ஆய்வாளர் மார்கரெட் தெரசாவிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.  
 
ஆம், கடந்த மாதம் தனக்கு குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக அபராதம் விதித்தது குறித்து வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்ற்வே ஆறுமுகம் உதவி காவல் ஆய்வாளர் மார்க்கெட் தெரசாவை கழுத்தில் அறுத்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்படது. 
 
பின்னர் உடனடியாக உதவி காவல் ஆய்வாளர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆறுமுகத்தை காவல்துறையினர் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.