1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (14:23 IST)

கங்கையம்மன் கோவில் திருவிழாவில் அந்தரத்தில் பறந்த பக்தர்கள்!

devotee
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த அம்மன் திருவிழாவில் ஒரு பக்தர் அந்தரத்தில் பறந்தபடி நேர்த்திக் கடன் செலுத்தினார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம் அக்ரா பாளையத்தம் என்ற  பகுதியில் ஆண்டு தோறும் கங்கையம்மன் கோவில் திருவிழா கொண்டாடப்படுகிறது.

தற்போது நடந்து வரும் இத்திருவிழாவில் கங்கை அம்மனுக்கு பகதர்கள் தங்கள் நேர்த்தி  கடனை செலுத்தினர். தீமித்தல், தீச்சட்டி எடுத்தள், அலகு குத்துதல் உள்ளிட்ட நேர்த்திக் கடன் செலுத்திய நிலையில் இரண்டு பக்தர்கள் அந்தரத்தில் பறந்தபடி, கங்கை அம்மனுக்கு மாலை அணிவித்தனர்.

இதைப்பார்க்கத பக்தர்களும், மக்களும் ஆச்சர்யம் அடைந்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிற்து.