வாடகை தராமல் குடியிருந்த திமுக வட்டசெயலாளர்: நீதிமன்றம் கண்டிப்பு..!
வாடகை தராமல் திமுக வட்ட செயலாளர் ஒருவர் குடியிருந்ததாக கூறப்பட்டதை அடுத்து நீதிமன்றம் இதனை கண்டித்து உள்ளது
64 வயதான கிரிஜா என்பவரின் வீட்டில் திமுக வட்டச் செயலாளர் ராமலிங்கம் என்பவர் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் வாடகை தராமல் குடியிருந்த விவகாரம் நீதிமன்றம் சென்றது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அரசியல் அதிகாரத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என்றும் சுயநலனுக்காக பிரச்சனைகளை உருவாக்க பயன்படுத்தக் கூடாது என்று தெரிவித்தார்
அரசியல் அதிகாரத்தின் மூலம் மக்கள் மிரட்டப்படுவதை நீதிமன்றம் கைகட்டி வேடிக்கை பார்க்காது என்றும் அரசியல்வாதிகளின் வார்த்தை செயல் ஆகியவை தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார். நீதிபதியின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Edited by Siva