1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 6 செப்டம்பர் 2023 (14:37 IST)

உதயநிதிக்கு மிரட்டல் விடுத்த சாமியார் மீது புகார்!

அமைச்சர் உதயநிதிக்கு மிரட்டல் விடுத்த சாமியார் மீது திமுக வழக்கறிஞர் அணியினர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்.


சமீபத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் நேற்று திடீரென அயோத்தி சாமியார் பரமஹன்ஸ் ஆச்சாரியார் உதயநிதி தலையை சீவிக் கொண்டு வந்தால் ரூபாய் 10 கோடி தரப்படும் என்று தெரிவித்தார். 

அதற்கு உதயநிதி கேலியாக 10 கோடி எதற்கு, பத்து ரூபாய் சீப்பு இருந்தால் நான் தலையை சீவிக் கொள்வேன் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் உதயநிதியின் தலையை சீவுவதற்கு 10 கோடி போதவில்லை என்றால் வெகுமதியை உயர்த்த தயாராக இருக்கிறேன் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து மிரட்டல் விடுத்தும் வகையில் வீடியோ வெளியிட்ட அயோத்தியா சாமியார் சீர் ராமச்சந்திர தாஸ் பரமஹன்ஸ் ஆச்சார்யா மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக மதுரை மாநகர் மாவட்ட வழக்கறிஞர் அணியினர் மதுரை மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் அவர்களிடம் புகார் மனு அளித்தனர்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை சீவி கொண்டு வருபவருக்கு ரூபாய் 10 கோடி பரிசளிப்பதாகவும் யாரும் கொண்டு வராத பட்சத்தில் அவரே தலையை சீவி விடுவதாக கூறிக்கொண்டே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை வாளால் குத்தி தீயால் எரித்துக் கொண்டே ஒழிக ஒழிக என கோஷமிட்ட சாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.