வியாழன், 1 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 23 செப்டம்பர் 2020 (16:20 IST)

அப்பா திட்டியதால் கோபித்துக் கொண்ட மகன்… ஆன்லைனில் பாய்சன் வாங்கி?

அப்பா திட்டியதால் கோபித்துக் கொண்ட மகன்… ஆன்லைனில் பாய்சன் வாங்கி?
மும்பையில் ஆன்லைனில் விளையாட்டுப் போட்டிகள் விளையாடிக் கொண்டே வந்ததால் அப்பா திட்டியதால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நெல்லை பாளையங்கோட்டை  ராஜேந்திர நகரைச் சேர்ந்தவர் அர்ஜூனன் என்பவர். இவர் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவர் மகன் நிஷாந்த், மும்பையில் பொறியியல் கல்லூரியில் படித்துவந்தார். கொரோனா லாக்டவுன் காரணமாக அவர் இப்போது பெற்றோருடன் வசித்து வருகிறார். ஆன்லைன் மூலமாக பாடங்களைக் கவனித்து வந்த அவர் மற்ற நேரங்கள் முழுவதும் செல்போனில் கேம்களாக விளையாடி வந்தார்.

இதனால் அவரது அப்பா அவரை அதிருப்தியுற்று அவரை திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்து ஆன்லைன் மூலமாக பாய்சன் வாங்கி, அதைக் குடித்துள்ளார். அதையடுத்து அவரை மருத்துவமனையில் சேர்க்க சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.