செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (11:42 IST)

மனைவியைக் கொலை செய்துவிட்டு பூச்சிமருந்து குடித்து தற்கொலை முயற்சி – எல்லாம் இதனால்தான்!

திருவாரூர் மாவட்டத்தில் பால்சாமி என்பவர் தன் மனைவியைக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடிக்கு அருகே உள்ள தென்பரை கிராமத்தைச் சேர்ந்தவர் பால்சாமி. இவருக்கு வயது 60 ஆனாலும் அடிக்கடி குடித்துவிட்டு வந்த தன் மனைவி மாரியம்மாளிடம் தகராறு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். வழக்கம் போல குடித்துவிட்டு வந்த பால்சாமி வயல்வெளியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மாரியம்மாளிடம் சென்று தகராறு செய்துள்ளார்.

அப்போது வாக்குவாதம் முற்றியதில் அரிவாளை எடுத்து மனைவியை கழுத்து மற்றும் தாடையில் வெட்டியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதன் பின் வீட்டிற்கு வந்த பால்சாமி பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றியுள்ளனர்.

உயிரிழந்த மாரியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் மிகுந்த பதட்டத்தை உண்டுபண்ணியுள்ளது.