தொடர்புடைய செய்திகள்
- புலம்பெயர்ந்து வாழ்பவர்களின் பட்டியலில் இந்தியர்கள் முதலிடம்!
- 1.02 கோடியை தாண்டிய குணமடைந்தவர்கள் எண்ணிக்கை! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!
- 4வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி 182 ரன்கள் முன்னிலை!!
- முதல் இன்னிங்ஸில் 33 ரன்கள் மட்டுமே குறைவாக எடுத்த இந்தியா!
- பேட்டிங்கிலும் அசத்திய தமிழக வீரர்: டிராவை நெருங்கும் போட்டி!
கல்யாண வீட்டில் மொய்… கூகுள் பே & போன் பே மூலமாக வசூலித்த மணமக்கள்!
கல்யாண வீட்டில் ஆன்லைன் ட்ரான்ஸ்சேக்ஷன் மூலமாக மொய் வசூலித்த தம்பதியினர் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.
கல்யாணம் போன்ற சுபகாரியங்களின் போது மணமக்களுக்கு உறவினர்களும் நண்பர்களும் அன்பளிப்பு வழங்கி தங்கள் பாசத்தை வெளிப்படுத்துவர். இந்தியாவில் அன்பளிப்புகள் ஒருபுறம் இருந்தாலும் மொய் எனப்படும் பணமாக அளிப்பதும் உண்டு. தற்போது கொரோனா காரணமாக இந்த முறையயை நவீனப்படுத்தியுள்ளனர் ஒரு தம்பதியினர்.
துரை பாலெரங்காபுரம் சரவணன் என்பவருக்கும், பெங்களூரில் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் மதுரை அனுப்பானடியை சேர்ந்த சிவசங்கரி என்பவருக்கும் மதுரையில் நடைபெற்ற திருமண விழாவில் யுபிஐ மூலமாக மொய் வசுலித்துள்ளனர் இந்த தம்பதியினர். இதற்காக பார்கோட் உருவாக்கி ஆன்லைன் பணம் அனுப்ப வசதியாக செய்துள்ளனர். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
