புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : திங்கள், 18 ஜனவரி 2021 (11:04 IST)

ரஜினி ரசிகர்கள் எந்த கட்சியிலும் இணையலாம்.. ஆனா..? – சுதாகர் கருத்து!

நடிகர் ரஜினிகாந்தின் மக்கள் மன்ற நிர்வாகிகள் வேறு கட்சிகளில் இணைந்து வருவது குறித்து தலைமை நிர்வாகி சுதாகர் கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கி எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உடல்நல குறைவால் கட்சி தொடங்கும் முடிவிலிருந்து விலகினார் ரஜினிகாந்த். அவரது இந்த முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பலர் வேறு சில கட்சிகளில் இணைய தொடங்கியுள்ளனர்.

சமீபத்தில் தூத்துக்குடி ஸ்டாலின் உள்ளிட்ட சில ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகள் திமுகவில் இணைந்துள்ளனர். இதுகுறித்து விளக்கமளித்துள்ள மக்கள் மன்ற தலைமை நிர்வாகி சுதாகர் “ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் விரும்பினால் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவர்களுக்கு விருப்பமான எந்த கட்சியிலும் இணையலாம். அதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது. எந்த கட்சியில் இணைந்தாலும் அவர்கள் ரஜினி ரசிகர்கள் என்பது எப்போதும் மாறாதது” என தெரிவித்துள்ளார்.