வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 17 ஜனவரி 2021 (12:59 IST)

முதல் இன்னிங்ஸில் 33 ரன்கள் மட்டுமே குறைவாக எடுத்த இந்தியா!

முதல் இன்னிங்ஸில் 33 ரன்கள் மட்டுமே குறைவாக எடுத்த இந்தியா!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை விட 33 ரன்கள் மட்டுமே குறைவாக எடுத்துள்ளது 
 
இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா முதல் இன்னிங்சில் 336 ரன்கள் எடுத்து உள்ளது. எனவே 33 ரன்கள் முன்னிலையில் உள்ள ஆஸ்திரேலிய அணி தற்போது 2வது இன்னிங்சை விளையாடி வருகிறது என்பதும் அந்த அணி சற்று முன் வரை விக்கெட் இழப்பின்றி 13 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
முன்னதாக முதல் இன்னிங்சில் இந்திய அணியின் ஷர்துல் தாக்கூர் 67 ரன்களும் வாஷிங்டன் சுந்தர் 62 ரன்கள் எடுத்து அபாரமாக இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினர் என்பது குறிப்பிடத்தக்கது. முதன்முதலாக பேட்டிங் செய்த தமிழக வீரர் நடராஜன் ஒரு ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று 3-வது நாள் இன்னும் சற்று நேரத்தில் முடிவடையும் நிலையில் இந்த போட்டியில் டிராவை நோக்கி செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது