காருக்குள் உல்லாசம்? நிர்வாணமாக மரணித்த காதல் ஜோடி!

Sugapriya Prakash| Last Updated: புதன், 9 அக்டோபர் 2019 (12:29 IST)
காருக்குள் நிர்வாணமாக மரணித்து கிடந்த காதல் ஜோடி குறித்து போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர். 
 
சேலம் பகுதியை சேர்ந்த வெள்ளி வியாபாரி கோபியின் மகன் சுரேஷ். கல்லூரியில் படித்து வரும் சுரேஷ் சம்பவ தினத்தன்று கலூரி முடிந்து வீடு திரும்பாததால் குடும்பத்தார் அவனை தேடியுள்ளனர். குடும்பத்தாரின் தேடல் பலன் அளிக்காத நிலையில் போலீஸில் புகார் அளித்துள்ளனர். 
 
இந்த புகாரை ஏற்ற போலீஸார் சுரேஷ் தேடிய போது, கோபிக்கு சொந்தமான கார் ஷெட் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் சுரேஷ் மற்றும் ஒரு இளம்பெண்ணின் சடலம் நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்டது. 
 
அந்த இளம்பெண் அதே பகுதியை சேர்ந்த வெள்ளி வியாபாரி ரவி என்பவருடைய மகள் ஜோதிகா என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் பின்னர் இரு குடும்பத்தாரிடமும் விசாரணை மேற்கொண்டதில், சுரேஷ் - ஜோதிகா காதலித்ததாகவும், ஆனால், குடும்பத்தினர் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததும் தெரியவந்துள்ளது. 
 
இதனால், இந்த காதல் ஜோடி தற்கொலை செய்துக்கொண்டதா? அப்படி தற்கொலை செய்துக்கொண்டால் எதற்கு நிர்வாணமாக இருக்க வேண்டும் அல்லது காருக்குள் உல்லாசமாக இருந்த போது மூச்சடைத்து உயிரிழந்துள்ளனரா என்ற கோணத்தில் அடுத்தக்கட்ட விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர். 


இதில் மேலும் படிக்கவும் :