தொடர்புடைய செய்திகள்
- வீட்டிற்கே வந்து ஆயிரம் ரூபாய் வழங்குவார்கள் – முதல்வர் அறிவிப்பு!
- மோடி விளக்கு ஏற்ற சொன்னது எதற்காக? எச்.ராஜா அடடே விளக்கம்!!
- உ.பி.யில் ஒரேநாளில் 172 பேருக்கு கொரோனா பாதிப்பு
- கொஞ்ச நாள் ஊர்ல ஆள் இல்லைனா போதுமே! ஜாலி விசிட் அடிக்கும் காட்டு விலங்குகள்!
- கண்டபடி வெளியே செல்ல முடியாது... கறார் காட்டிய முதல்வர்!!
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மு.க. ஸ்டாலின் உதவி
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,301ஆக உயர்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது, 157 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 234 பேருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தமிழக அரசு மக்கள் நடமாட்டத்தைக் குறைக்க பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதியில் கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகள் வழங்கினார்.
கொளத்தூரில் உள்ள 6வது, மண்டல அலுவலகத்தில் 1000 தூய்மைப் பணியாளர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் சார்பாக உணவு வழங்கப்படுகிறது. மேலும், இன்று காலைச் சிற்றுண்டி வழங்கி, அவர்களுக்குத் தேர்வையான பாதுக்கப்பு கருவிகளையும் தருவினார்.
ஊரடங்கினால் அங்கு பாதிக்கப்பட்டுள்ள வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவிகள், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.500, எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு 3 மாதத்திற்கு தேவையான பொருட்கள் வழங்கினார்.
