செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (12:55 IST)

கண்டபடி வெளியே செல்ல முடியாது... கறார் காட்டிய முதல்வர்!!

வெளியே செல்ல இனி கலெக்டரிடம் மட்டும்தான் அனுமதி பெற வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கொரோனா தொற்றை குறைக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிறப்பு, இறப்பு, திருமணம், உடல்நலக் குறைவு உள்ளிட்ட பிரச்சனைகளால் வெளியே செல்வோர் அனுமதி வாங்க வேண்டும். 
 
1. சென்னையில் இருந்து வேறு மாவட்டங்களுக்குச் செல்வோர் மாநகராட்சி ஆணையரிடம் அனுமதி பெற வேண்டும். 
2. சென்னையிலேயே ஒரு மண்டலத்தில் இருந்து வேறு மண்டலத்திற்கு செல்வோர், மண்டல அதிகாரியிடம் அனுமதி பெறு வேண்டும். 
3. மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்கள், வேறு மாவட்டங்களுக்கு செல்ல  மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும்.
4. மாவட்டத்திற்குள்ளேயே பயணம் செய்ய வட்டாட்சியரிடம் அனுமதி பெற வேண்டும்.
 
ஆனால், தற்போது இவை மாற்றப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் சண்முகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், வட்டாட்சியர்கள் மற்றும் துணை ஆணையர்கள் மூலம் அனுமதி அளிக்கும் முறை திருப்திகரமாக இல்லை.
 
எனவே, வட்டாட்சியர்கள் மூலம் அனுமதி அளிக்கும் முறையை உடனடியாக ரத்து செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும், ஏற்கனவே இருந்தது போன்று பொதுமக்கள் வெளியூர் செல்ல இனி கலெக்டரிடம் மட்டும்தான் அனுமதி பெற வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.