கொஞ்ச நாள் ஊர்ல ஆள் இல்லைனா போதுமே! ஜாலி விசிட் அடிக்கும் காட்டு விலங்குகள்!
நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்குள் தஞ்சம் அடைந்துள்ளதால் காட்டு விலங்குகள் ஊர்களுக்கு ஜாலியாக விசிட் அடித்து வருகின்றன.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும்பாலும் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் காட்டுப்பகுதியை ஒட்டியுள்ள கிராமம் மற்றும் நகரங்களில் பல காட்டு விலங்குகள் தென்படும் சம்பவங்கள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலுமே இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. இப்படி திடீரென ஊருக்குள் வரும் விலங்குகளின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. சமீபத்தில் இந்தியாவின் சுற்றுலா பகுதியான டெஹ்ராடூனில் காட்டு யானை ஒன்று அதிகாலை வேலையில் ஊருக்குள் புகுந்து சென்றுள்ளது.
எந்த பொருட்களையும் நாசம் செய்யாமல், பதட்டமில்லாமல் காலை வாக்கிங் செல்வது போல ஜாலியாக அது நடந்து செல்லும் வீடியோ சமீபத்தில் ட்ரெண்டாகி வருகிறது.