திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (13:56 IST)

உ.பி.யில் ஒரேநாளில் 172 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,301 ஆக உயர்ந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ள நிலையில் உத்தர பிரதேசத்தில் ஒரேநாளில் 172 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 21 நாட்கள் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கில் முதல் 10 நாட்கள் இன்றுடன் முடிவடைகிறது. ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையிலும் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வண்ணமே உள்ளது. 

இந்நிலையில் சற்றுமுன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,301ஆக உயர்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது, 157 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில், முதல்வர்  யோகி ஆதித்தயநாத் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு, ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

புதிதாக உறுதிசெய்யப்பட்ட 172 பேரில் 42 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று செய்திகள் வெளியாகின்றன.