1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 31 மே 2021 (16:31 IST)

நம்பிக்கை அளித்தமைக்கு நன்றி: அரசு செவிலியர்கள் சங்கம் !

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அரசு செவிலியர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. 

 
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்ட வாரியாக ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார். அவ்வாறாக நேற்று கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை சென்ற அவர் பிபிஇ கிட் கவச உடை அணிந்து கொண்டு கொரோனா வார்டிற்குள் சென்று ஆய்வுகளை மேற்கொண்டார்.
 
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அரசு செவிலியர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. கவச உடையுடன் சென்று கொரோனா வார்டில் பணியாற்றும் செவிலியர்களிடம் முதல்வர் நலம் விசாரித்தமைக்கு நன்றி கூறியுள்ளார். நேரடியாக ஆய்வு நடத்தியது செவிலியர்களுக்கு நம்பிக்கையும் தைரியத்தையும் அளித்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளன.