தமிழகத்தில் இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு எவ்வளவு? சுகாதாரத்துறை
தமிழகத்தில் கொரனோ வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைந்துவிட்ட நிலையில் இன்று வெறும் 6 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 6 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களின் எண்ணிக்கை 8 பேர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் தற்போது தமிழகம் முழுவதிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 45 என்றும் அதில் சென்னையில் மட்டும் 13 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும் தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
Edited by Mahendran