1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. After China omicron in india also

இந்தியாவிலும் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்: 2 பேருக்கு பாதிப்பு என தகவல்!

omicron
சீனாவில் தற்போது உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாகவும் இதனால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
கடந்த சில நாட்களில் மட்டும் சீனாவிலும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக பலர் உயிரிழந்ததாகவும் ஆனால் அதே நேரத்தில் சீன ஊடகங்கள் அதை மறைத்து தாகவும் கூறப்பட்டது. 
 
இந்நிலையில் சீனாவை அடுத்து தற்போது இந்தியாவிலும் ஒமிக்ரான் வைரஸ் நுழைந்துள்ளதாக கூறப்படுகின்றது. குஜராத் மற்றும் ஒரிசாவில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அடைந்தவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் குஜராத்தில் இரண்டு நபர்களும் ஒரிசாவில் ஒரு நபருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
சீனாவை அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான்  வைரஸ் இந்தியாவிலும் நுழைந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது, இதனை அடுத்து மத்திய அரசு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 

Edited by Siva
அடுத்த கட்டுரையில்
நம் நாட்டுக்கு மொத்தம் 2 தந்தைகள்: மோடிக்கு துணை முதலமைச்சர் மனைவி புகழாராம்!