1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 22 மார்ச் 2021 (08:46 IST)

தடுப்பூசி போட்டாலும் கொரோனா பரவும்: எய்ம்ஸ் இயக்குனர் எச்சரிக்கை!

தடுப்பூசி போட்டாலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகம் இருக்கும் என்றும் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்காக அலட்சியமாக இருக்கக்கூடாது என்றும் மாஸ்க் மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் எய்ம்ஸ் இயக்குனர் எச்சரிக்கை தெரிவித்துள்ளார்
 
கொரோனா வைரஸ் இரண்டாவது அலை இந்தியாவில் தொடங்கி விட்டது என்றும் இது முதலில் வந்த கொரோனாவை விட மிகவும் தீவிரமாக இருக்கும் என்றும் குறிப்பாக உயிரிழப்புகள் அதிகம் இருக்கும் என்றும் எயிட்ஸ் இயக்குனர் தெரிவித்துள்ளார்
 
தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் முகக் கவசம் அணிவது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் தொடரவேண்டும் என்றும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தால் மட்டுமே கொரோனாலில் இருந்து பாதுகாக்க முடியும் என்றும் தடுப்பூசி போட்டுக் கொண்டு விட்டோம் என்ற அலட்சிய போக்குடன் யாருக்கும் இருக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
புதிய வகை கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் உருவாகவே செய்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு இருப்பதாக எய்ம்ஸ் இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது