தொடர்புடைய செய்திகள்
- 12.38 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
- கொரோனா பரவல் எதிரொலி: ராணி எலிசபெத்தின் பிறந்தநாள் கொண்டாட்டம் ரத்து!
- சென்னையில் படிப்படியாக நிரம்பும் கொரோனா வார்டு: தேர்தலுக்கு பின் லாக்டவுனா?
- கொரோனா 2வது அலை தொடங்கிவிட்டது. சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி!
- தமிழகத்தில் மீண்டும் பரவும் கொரோனா வைரஸ்: இன்று ஒரே நாளில் 1289 பேர் பாதிப்பு!
வேகமாக பரவும் கொரோனா: ரயில்கள் நிறுத்தப்படுமா?
தமிழகம் உள்பட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் ஏப்ரல் மாதம் முதல் ரயில்கள் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
தற்போது சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வரும் நிலையில் அனைத்து ரயில்களையும் விரைவில் இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஆனால் மகாராஷ்டிரா, பஞ்சாப், மத்திய பிரதேசம், குஜராத், கர்நாடகா, சட்டீஸ்கர், டெல்லி, தமிழகம் ஆகிய மாநிலங்களில் மீண்டும் கொரோனா வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது
இதன் காரணமாக ரயில்கள் மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்க சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் இப்போதைக்கு ஓடும் ரயில்கள் மட்டுமே இயக்க முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது
மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பில் வேகம் இன்னும் அதிகரித்தால் தற்போது இயங்கி கொண்டிருக்கும் ரயில்களும் குறைக்கப்படும் அல்லது நிறுத்தப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது
