செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva

கொரோனா பரவல் எதிரொலி: ராணி எலிசபெத்தின் பிறந்தநாள் கொண்டாட்டம் ரத்து!

இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக மீண்டும் பரவி வருவது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஒரு சில நாடுகளில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பதும் பல கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
குறிப்பாக இங்கிலாந்து நாட்டில் புதிய வகை வைரஸ் தொற்று பரவியிருப்பதை அடுத்து அங்கு ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதும் இந்த சட்டத்தை எதிர்த்து மக்கள் போராட்டம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் பிறந்தநாள் கொண்டாட்டம் ரத்து செய்யப்படுவதாக இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் பிறந்தநாள் கொண்டாட்டம் இதே காரணத்தால் ரத்து செய்யப்பட்ட நிலையில் இரண்டாவது ஆண்டாக தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது