1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 9 மே 2020 (11:38 IST)

கோயம்பேடு கொரோனா: முற்றுப்புள்ளி இல்லாமல் நீளும் பரவல்!!

கோயம்பேடு சந்தை வாயிலாக கொரோனா பரவுதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 

 
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள போதிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முக்கியமாக சென்னையில் பாதிப்புகள் அதிகமாக உள்ளன. சுமார் 3000 க்கும் மேல் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
கடந்த வாரம் வரைக் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு திடீரென அதிகரிக்கக் காரணம் கோயம்பேடு மார்க்கெட் ஹாட்ஸ்பாட்டாக மாறியதுதான். அங்கு பணிபுரிந்த பல தொழிலாளர்களுக்குக் கொரோனா உறுதியானதை அடுத்து அவர்களைப் பரிசோதிக்க மளமளவென எண்ணிக்கை உயர ஆரம்பித்தது.
 
இந்நிலையில் அந்த மார்க்கெட்டோடு மட்டும் தொடர்புடையவர்களில் 1589 பேருக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரவல் குறையாமல் அதிகரித்த வண்ணமே உள்ளது. தற்போதைய தகவலின்படி, 
 
விழுப்புரம், பெரம்பலூர், காஞ்சிபுரத்தில் கோயம்பேடு சந்தை மூலம் தொடர்புடைய மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
 
பெரம்பலூரில் கோயம்பேடு மூலம் தொடர்புடைய மேலும் 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது 
 
செங்கல்பட்டை சேர்ந்த 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
 
திருவள்ளூரில் கோயம்பேடு சந்தையோடு தொடர்புடைய 14 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.