செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 9 மே 2020 (11:03 IST)

கொரோனாவை பொருட்படுத்தமால் மக்களுக்காக இறங்கிய ஜெகன்!

முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார். 
 
ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் கெமிக்கல் ஆலை ஒன்றில் திடீரென வாயு கசிவு ஏற்பட்டதால் அந்த பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்படைந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
நாயுதோட்டா அருகே ஆர்.ஆர்.வெங்கடபுரத்தில் உள்ள ஆலையில் அதிகாலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனையால் அந்த பகுதியில் உள்ள மூன்று கிராமங்களில் உள்ள பொதுமக்கள் உடனடியாக கிராமத்தை விட்டு வெளியேற்றப்பட்டதாகவும் தெரிகிறது.  
இந்நிலையில் கொரோனாவையும் பொருட்படுத்தாமல் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார். 
 
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்று ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி முன்னரே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தகது.