1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 31 டிசம்பர் 2021 (19:00 IST)

இரவு நேர ஊரடங்கால் எந்த பயனும் இல்லை: சவுமியா சுவாமிநாதன்

இரவு நேர ஊரடங்கால் எந்த பலனும் இல்லை என உலக சுகாதார அமைப்பின் தலைவர் சவுமியா சுவாமிநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
80% மக்கள் நடமாடாத இரவு நேரத்தில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தி விட்டு பகல் நேரத்தில் அனைவரும் கொரோனா வைரஸ் விதி முறைகளை கடைப் பிடிக்காமல் இருந்தால் இரவு நேர ஊரடங்கால் எந்த பயனும் இல்லை என்று ஏற்கனவே கூறப்பட்டு வந்தது. 
 
இந்த நிலையில் கொரோனா  வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது, தவறாமல் தடுப்பூசி போடுவது தான் முக்கியம் என்பதும் இரவு நேர ஊரடங்கால் எந்த பலனும் இல்லை என்றும் சவுமியா சுவாமிநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.