செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 13 நவம்பர் 2021 (21:18 IST)

கொரொனா கட்டுப்பாடுகள் நீக்கம்!- தெற்கு ரயில்வே அறிவிப்பு

கொரொனா காரணமாக சென்னை புறநகர் ரயில்களில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுளது.
 

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட ப,ஏறு உலகநாடுகளுக்கு கொரோனா தொற்றுப் பரவியது. இதனால் ஊடரங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. கொரோனா முதல் அலை முடிந்து தற்போது கொரொனா 2 வது அலை வேகமாகப் பரவி வந்த நிலையில் இதன் தாக்கம் குறைந்துள்ளது.

அதனால்,  ஊரடங்கில் சில தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை புறநகர் ரயில்களில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுளது.

அதன்படி, முன்பதிவில்லாத பயணச்சீடு, ரிட்டன் டிக்கெட், மாதாந்திர பயணச் சீட்டுகள் அனைத்துப் பயணிகளும் பெறலாம் எனத் தெற்கு ரயில்வேதுறை அறிவித்துள்ளது.