திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 29 ஜனவரி 2021 (16:30 IST)

முதல்வர் பாதுகாப்புக்குச் சென்ற காவலருக்கு கொரோனா உறுதி !

இந்நிலையில், முதல்வரின் பாதுகாப்புக்குச் சென்ற காவலர் ஒருவருக்கு கொரோனா உறூதியாகியுள்ளத். இதனால் அதிமுகவினரும் முதல்வரின் பாதுகாப்பு வட்டாரத்தில் உள்ள அதிகாரிகளும் அதிர்சியில் உள்ளனர்.

மேலும் முதல்வருடன் பாதுகாப்புக்குக் கோவை சென்று வந்த காவலர் உள்பட மேலும் 3 போலிஸாருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீஸார் 3 போலீஸாருக்கு நேற்றுத் தொற்று உறுதியான நிலையில், இன்று மேலும் 3 போலீஸாருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,855 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 1,07,20,048 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 163 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  1,54,010 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,03,94,352 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 1,71,686 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.