வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 28 ஜனவரி 2021 (16:53 IST)

சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்....கோடிப் பேர் வருவார்கள்... முதல்வருக்கு நிர்வாகி சவால் !!

நேற்று காலையில் ஊழல் வழக்கில் 4 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா விடுதலையானார்.

அவருக்குச் சிறையிலிருந்தபோது,கொரோனா தொற்று அறிகுறி இருந்ததால் சிலநாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார். இன்னும்சில நாட்களில் தமிழகத்திற்கு அவர் வரவுள்ளர்.

அவரை பிரமாண்டமான முறையில் வரவேற்க அமமுக பொதுச்செயலாளர் தினகரன், உள்ளிட்ட சசிகலா ஆதரவாளர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

இந்நிலையில், இந்நிலையில் சசிகலாவை வரவேற்றுப் போஸ்டர் ஒட்டிய நெல்லை மாவட்ட அதிமுக நிர்வாகி சுப்பிரமணிய ராஜா கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மேலும் அ.இ.அ.தி.மு.கவை வழிநடத்த வரும் பொதுச்செயலாளார் அவர்களே வருக…ஆளுமையை உருவாக்கிய ஆளுமையே என்று அவர் போஸ்டரில் ஒட்டியிருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

மேலும் நீக்கப்பட்ட நிர்வாகி,  என்னை நீக்கிவிட்டீர்கள்..நாளை லட்சம் பேர் வருவார்கள் இந்த எண்ணிக்கை கோடியாக கூடும் என்ன செய்வீர்கள் என முதல்வர் மற்றும் துணமுதல்வருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.